பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் முதல்வருடன் ஆலோசனை!


முதல்வர் பழனிசாமியுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு


சென்னை:


முதல்வர் பழனிசாமியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.


ஜூன் 15ம் தேதி பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ள நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.


பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வெழுத உள்ள மாணவ, மாணவிகள் நுழைவுச் சீட்டைப் பெற்று வரும் நிலையில், பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் பழனிசாமியை  சந்தித்து ஆலோசனை நடத்துவதாகக் கூறப்படுகிறது.


மேலும், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடத்தப்படுமா? அல்லது ஒத்திவைக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


தற்போது சென்னை உயர்நீதிமன்றம் ஏன் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை தள்ளி போட கூடாது? என்று கூறி வழக்கை பிற்பகளுக்கு தள்ளி போடப்பட்டுள்ளது.அரசியல் கட்சி பிரமுகர்கள்,சமூக ஆர்வல்களும்  பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.