மதுரை,
மதுரை மத்திய சிறையில் வார்டனாக இருக்கும் ஒருவருக்கு கொரானா தொற்று ஏற்ப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
நெல்லையை சேர்ந்த அவர் தற்போது சொந்த ஊருக்கு சென்றிருந்தார்.அப்போது அவருக்கு சளி,காய்ச்சல் இருந்தது. அதன்பின் அவர் தானாகமுன் வந்து கொரொனா பரிசோதனை செய்து கொண்டதில் அவருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.உடனடியாக அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரொனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனை தொடர்ந்து மதுரை மத்திய சிறைச்சாலையில் சூப்பிரண்டு அவர்களின் முயற்சியில் சிறை அலுவலர்களுக்கும் காவலர்களுக்கும் மற்றும் கைதிகளுக்கும் கொரொனா பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.