மதுரை மாநகரில் யாரேனும் பணத்திற்கு ஆசைப்பட்டு அதிக வட்டிக்கு பணம் கொடுத்து கடன் பெற்ற நபரிடம் அதிக வட்டி தர சொல்லி கட்டாயப்படுத்தினாலோ அல்லது மிரட்டினாலோ அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
மேலும் சட்டவிதிகளை மீறி அதிகமாக வட்டி வசூல் செய்தாலோ அல்லது கடன் பெற்ற நபரை துன்புறுத்தினாலோ அவர்கள் மீது கடுமையான சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும், அதிக வட்டியால் பாதிக்கப்பட்ட மக்கள் அந்தந்த காவல் நிலை எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் தயங்காமல் புகார் தெரிவிக்கலாம் என்றும் மேலும் 24 x 7 மதுரை மாநகர வாட்ஸ்அப் முறையீட்டு எண்ணிற்கு 83000 21100 புகார் தெரிவிக்கலாம் என்றும் புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் எச்சரித்துள்ளார்.