மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம்ஆனந்த் சின்ஹா பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளுக்கு இணங்க,
பொதுமக்கள் அனைவரும் வயதானவர்கள் மீது அதிக கவனம் செலுத்தி வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கும் படியும், வயதானவர்களை எக்காரணம் கொண்டும் வெளி இடங்களுக்கு தயவுசெய்து அனுப்ப வேண்டாம் என்றும் மதுரை மாவட்ட காவல்துறையினர் நகர் முழுவதும் விழிப்புணர்வுகளை ஏற்ப்படுத்தி வருகின்றனர்.
வயதானவர்களை கொரோனா வைரஸ் தாக்குவதற்கு அதிகமாக வாய்ப்புகள் உள்ளதால்
தல்லாகுளம் காவல் ஆய்வாளர் மலைச்சாமி வெளி இடங்களுக்கு வரும் வயதானவர்களுக்கு 1000 முகக் கவசங்களை வழங்கி கொரோனா தொற்றிலுருந்து பாதுகாப்பாக இருக்கும்படி முதியவர்களுக்கு தொடர்ந்து அறிவுரைகள் வழங்கி வருகிறார்.