பிளஸ்-2 தேர்வை மதுரை மத்திய சிறையில் இருந்த 5 கைதிகள் எழுதி இருந்தனர். அவர்கள் 5 பேரும் தேர்வில் வெற்றி பெற்று விட்டனர். தேர்ச்சி பெற்ற அவர்களை சிறை அதிகாரிகள் பாராட்டினர்.
மதுரை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 16,489 மாணவர்களும், 18,615 மாணவிகளும் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
15,006 மாணவர்களும், 17,956 மாணவிகளும் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றனர். மதுரை மாவட்டம் 94.42 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 13-வது இடத்தை பிடித்துள்ளது.
கைதிகள் படிப்பதற்கும் தேர்வை எழுதுவதற்கும் உரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்த சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றியினை தேர்வு எழுதிய 5 கைதிகளும் தெரிவித்தனர்.
சிறையிலுள்ள கைதிகள் வாழ்வில் வரும் காலங்களில் திருந்தி நல்லொலுக்கத்துடனும் நேர்மையுடனும் வாழ்வதற்கும் அவர்கள் வாழ்க்கைக்கு பொருளாதாரத்தில் உயர்வதற்கும் வேண்டிய அனைத்து உதவிகளையும் சிறைத்துறை சார்பில் செய்து கொடுத்து கைதிகளின் வாழ்க்கைக்கும் அவர்களுக்கு நம்பிக்கையும் ஏற்படுத்தி வரும் சிறைத்துறை கண்காணிப்பாளரை சமூக ஆர்வளர்கள் பாராட்டி வருகின்றனர்.