விஜயகாந்தின் நண்பரும் மதுரை மத்திய தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவுமான சுந்தரராஜன் இன்று உடல்நலக்குறைவினால் காலமானார்.
தேமுதிமுகவின் பொருளாராக பதவி வகித்தவர். கடந்த 2011ஆம் ஆண்டு மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக சட்டசபைக்கு சென்றவர். பின்னர் தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்க சீட் கிடைக்கவில்லை.
தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், விஜயகாந்தை சந்திக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இந்த நிலையில் உடல்நலக்குறைவால் அவர் காலமானார்.