கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வரிடம் நீட் தேர்வு பற்றிய கேள்விக்கு பதில் கூறும்போது,
தமிழ்நாட்டில் மாணவர்களின் மன உளைச்சலுக்கு தீர்வு காணும் விதமாகவே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா தாக்கம் குறைந்தபின் நீட் தேர்வு நடத்துமாறு பிரதமருக்கு நான் ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளேன்.
தமிழகத்தில் கொரோனாவை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் அதிகளவு கொரோனா பரிசோதனைகள் செய்வதன் காரணமாக தொற்று கட்டுக்குள் உள்ளது. உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் கொரோனாவுக்கு ஆளாகும் நபர்கள் அச்சப்பட வேண்டாம். கொரோனா பாதிப்பு முடிந்த பின்னர்தான் நீட் தேர்வு நடத்த வேண்டும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடு என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.