தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம் திமுகவில் இருந்து ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க செல்வம் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர் திமுகவில் இருந்து என்னை நீக்கியது ஜனநாயக படுகொலை என்றார்.
மேலும் அவர் கூறுகையில் இதுவரை நான் எந்த கட்சியிலும் இணையவில்லை.
ஆயிரம் விளக்கு தொகுதியில் மீண்டும் நான் போட்டியிட்டாலும் வெற்றி பெறும் வாய்ப்பு எனக்கு உள்ளது. யார் எனக்கு வாய்ப்பு கொடுக்கிறார்களோ அவர்கள் கட்சி சார்பில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிடுவேன்.
என் மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இல்லை. திமுகவில் இருந்து நீக்கியது மகிழ்ச்சியளிக்கிறது. எனது கடிதத்திற்கு பதில் கடிதம் கூட திமுக தரவில்லை. திமுகவில் இருந்து நிறைய பேர் வெளியே வருவார்கள்” என்றார்.